ஆண்டாள் குறித்த வைரமுத்து மேற்கோள் ஏன் தவறு?

ஆண்டாள் குறித்த வைரமுத்து மேற்கோள் ஏன் தவறு?


திரு.வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த மேற்கோள்சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதுஅவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். அதற்குள் நாம் போய் அவரை வருத்தப்படுத்த விரும்பாமல், அந்த மேற்கோள் ஏன் தவறு என்பதை ஆதாரபூர்வமாக விளக்கவே இந்த கட்டுரை:

தன்னை வந்தடைவதற்காக மூன்றுவிதமான வழிகளை பகவத்கீதையில் கிருஷ்ணர் தெளிவாக அர்ஜுனனிடம் தெரிவித்துள்ளார்.

(1) கர்மயோகம்:  

தனக்கு இயல்பாக விதிக்கப்பட்ட கடமைகளை பலன்களை தன்னிடம் அர்ப்பணித்துவிட்டு செய்வதன் மூலம் தன்னை அடைவது.

(2) ஞானயோகம் :  

தன்னைப்பற்றிய ஞானத்தை ஒரு குரு மூலம் அறிந்து, அதன் மூலம் தன்னை அடைவது.

(3) பக்தியோகம்:  

எதையும் எதிர்பாராத பிரேம பக்தி மூலம்,  தன்னைச் சரணடைந்து, அதன் மூலம் தன்னை அடைவதுமூன்று வழிகளிலும், பக்தியையே கிருஷ்ணர் மிக உயர்ந்ததாகக் கூறுகிறார்.

கீதையின் கடைசி அத்தியாயத்தில், "அனைத்து தர்மங்களையும் துறந்து, என்னையே சரணடைவாயாக"  என்று அர்ஜுனனுக்கு அறிவுரைகூறுகிறார்.

இதில், பக்தி யோகத்தை கடைப்பிடிப்பதற்கு, எந்த தகுதியும் தேவையில்லை. பகவான் மீது களங்கமற்ற பக்தியும், சரணாகதியும் மட்டும் இருந்தால் போதும் என்றும் கூறுகிறார் அவர்.

இந்த பக்தி யோகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சம்பிரதாயமாக இன்றும் தீவிரமாக இருப்பவை இரண்டு சம்பிரதாயங்களாகும்அவை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமும், கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயமும் ஆகும்.

இதில் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தூண்களாக விளங்குபவர்கள்  பண்ணிரெண்டுஆழ்வார்கள். இவர்கள் இனிய தமிழ்ப்பாசுரங்கள் மூலம் களங்கமற்ற பக்தியை வளர்த்தவர்கள்ஆண்டாளின் திருப்பாவையின் இனிமையைச் சொல்லவும் வேண்டுமோ?

பக்தியில் பாவங்கள் (ரசனைகள்அல்லதுபாவனைகள்) முக்கியமாக ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

(1) சாந்தரசம் : 

கண்ணனிடம் மரியாதை மற்றும் வியப்பு காரணமாக பக்தி செலுத்துவது இதில் வரும். நான்கு குமாரர்கள் எனப்படும் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் ஆகியொர் கண்ணனிடம் சாந்த பக்தியைச் செலுத்தியவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

(2) தாஸ்யரசம் : 

சாந்தரசத்திற்கு அடுத்த பாவனை இது. கண்ணனுக்கு அன்புடன் கூடிய சேவையாக இதுபரிணமிக்கிறது. இந்த சேவை மரியாதையுடன் கூடிய சேவையாகவும் இருக்கலாம். முழுமையான காதல் இன்னமும் வந்திருக்க வாய்ப்பிருக்காது.

(3) சாக்யரசம் 

தாஸ்ய ரசத்திற்கு அடுத்த நிலை இதுஇந்த நிலையில், கண்ணன் மீது நட்புணர்வு அரும்பியிருக்கும்இந்த நிலையில், கண்ணன் மீது பயமும், மரியாதையும் வெளிப்படாது. ஒருவித சமநிலையில் இருப்பார்கள். சுதாமா எனப்படும் குசேலர் கண்ணனிடம் காட்டிய நட்பு இதற்கு எடுத்துக்காட்டுகுசேலரைக் கண்ணன் தன் முதுகில் சுமந்து விளையாடியதை என்னவென்பதுஅர்ஜுனனுக்கு தேர் இழுத்ததன் மூலம் கண்ணன் காட்டிய நட்பை விவரிக்க முடியுமா?

(4) வாத்சல்யரசம் : 

இந்த நிலையில் கண்ணன் மீது அக்கரையுடன் கூடிய அன்பு இருக்கும்யசோதை கண்ணனின் வாயில் உலகத்தையே கண்டபோது, கண்ணன் மீது அக்கரை கொண்டு அவரின் நலனுக்காக எல்லா தெய்வங்களையும் வேண்டியது இந்த பாவனையில் வரும்.

(5) மாதுர்யரசம் 

இந்த மிக உயர்ந்த நிலையில்
, கண்ணனிடம் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது. கண்ணனுக்காக எதையும் செய்ய வேண்டும், தன்னையே அர்ப்பணிக்க வேண்டும் என்று தயாராக இருக்கும் நிலை இது. கண்னன் தரையில் நடக்கும் போது, கோபியர்கள் அவரது பாதம் வலிக்குமே, தாங்கள் தரையில் படுத்துக்கொள்ள கண்ணன் தங்கள் உடல் மீது நடக்கலாமே என்று எண்ணியவர்கள் அவர்கள்.

கண்ணனை மேற்கண்ட ஐந்து பாவனைகளில் அணுகலாம்கண்ணனை எந்த பாவனைகளில் நாம் அணுகுகிறோமோ கண்ணன் அதுவாகவே தன்னைத் தருகிறார் என்பதுதான் சிறப்பானது.

நட்புடன் அணுகியவர்களுக்கு நண்பனாகிறார். காதலுடன் அணுகியவர்களுக்கு தன்னையே தருகிறார்மரியாதையாக அணுகுகிறவர்களுக்கு குருவாகவும் ஆகிறார்.

கோபியர்களும் சாதாரண பெண்கள் இல்லைராம அவதாரத்தின் போது தவம் செய்து கொண்டிருந்த மிகச்சிறந்த ரிஷிகள் அவர்கள்.    ராமரால் கவரப்பட்டு, ராமரிடமே தங்கியிருக்க அவர்கள் வேண்டியபோது, தனது அடுத்த அவதாரத்தில் அவர்கள் தன்னையே அடைவார்கள் என்று ராமர் கொடுத்த வரம் காரணமாக, கண்ணனாக அவதரிக்கும் போது அவர்களுக்கு கோபியர்களாக பிறவிகள் கொடுத்து தன்னையே அடையச் செய்தார் பகவான்இது தெரியாமல் பலர் கோபியர்களை ஏதோ விளையாட்டுப் பிள்ளைகள் போலப் பேசுகிறார்கள்.

இந்தமிக உயர்ந்த மாதுர்ய பாவனையில், அடைந்தால் கண்ணனை மட்டுமே அடைவேன் என்று வாழ்ந்து அதன்படியே கண்ணனையே அடைந்த மிக உயர்ந்த பக்தை ஆண்டாள் ஆவார்இந்த மிக உயர்ந்த, அந்தரங்கமான பக்தி பாவனையை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாதுபலநூல்களை ஆராய்ச்சி செய்வதாலேயே இந்த மிக உயர்ந்த பாவனைகளைப் புரிந்துகொள்ள முடியாதுகண்ணனிடம் சரணாகதியுடன் கூடிய பக்திகொண்டவர்கள் மட்டுமே இந்த பாவனையைப் புரிந்துகொள்ள முடியும்.

எனவே, ஆன்மீகம் பற்றி பேசும் போதும், எழுதும் போதும், மிகவும் கவனம் தேவைசிறு தவறும் கூட, கோடிக்கணக்கானவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடும்.

திரு.வைரமுத்துவைப் பொறுத்தவரை, அவர் ஒரு ஆராய்ச்சியாளரின் மேற்கோளை அவரது கட்டுரையில் சேர்த்ததைத் தவிர்த்திருக்க வேண்டும்சரி, தவறு நிகழ்ந்துவிட்டது. அவரும் வருத்தம் தெரிவித்துள்ளார். நிச்சயம் அவருக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.

எனவே, இந்த விஷயத்தில், சமூக அமைதியை கருத்தில் கொண்டு எதிர்ப்புகளை இத்துடன் நிறுத்திக் கொள்வது நமது பக்குவத்தையும், நாகரீகத்தையும் காட்டும். நமது பக்குவமான அணுகுமுறை இனி ஆன்மீகம் பற்றி எழுதுபவர்க்கு ஒரு பாஸிடிவ்வான பாடமாக இருக்கும்.

கவிஞர் வைரமுத்துவும் இனி ஆன்மீக விஷயங்களை எழுதும்போது ஆராய்ச்சி மனப்பான்மையுடன் எழுதுவதைத் தவிர்த்து, அதில் உள்ள அந்தரங்கமான விஷயங்களுக்குள் நுழைந்தால், அது அவருடைய பாவனையையே மாற்றிவிடும் என்பது உறுதி.

நூற்றாண்டுகளாய் ஆங்கிலேயர்களின் ஆட்சியாலேயே அழிக்கமுடியாத பக்தி யோகத்தை வைரமுத்துவின் ஒரு தேவையற்ற மேற்கோள் மட்டும் அழித்துவிடுமா என்ன?

கருத்துகள்

POPULAR IN THIS SITE